கும்மிடிப்பூண்டி நகர அதிமுக சார்பில் நகர செயலாளர் எஸ்.டி.டி. ரவி ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நினைவு நாள் நிகழ்வில் கும்மிடிப்பூண்டி ஒன்றிய அதிமுக செயலாளர் கோபால்நாயுடு, ஒன்றிய குழு தலைவர் கே.எம்.எஸ்.சிவகுமார்,பொதுக்குழு உறுப்பினர் அபிராமன், அதிமுக தகவல் தொழில்நுட்ப அணி மாவட்ட செயலாளர் இமயம் மனோஜ் முன்னிலை வகித்தனர்.
தொடர்ந்து திரளான அதிமுகவினர் முன்னிலையில் கும்மிடிப்பூண்டி பேருந்து நிலையம் முன் அமைக்கப்பட்ட மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு அதிமுக நிர்வாகிகள் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த நிகழ்வில் அதிமுக மாவட்ட சிறுபான்மை அணி செயலாளர் சிராஜுதின் , நகர இளைஞர் மற்றும் இளம் பெண் பாசறை செயலாளர் சரவணன், மற்றும் அதிமுக நிர்வாகிகள் புருஷோத்தமன், கென்னடி அப்பு, சேது, கோபி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
புதுகும்மிடிப்பூண்டி ஊராட்சியில் உள்ள மார்க்கெட் பகுதியில் அதிமுக மாவட்ட அம்மா பேரவை நிர்வாகி எல்.சுகுமாறன் ஏற்பாட்டில் முதல்வர் ஜெயலலிதாவின் நினைவு நாள் நிகழ்வு நடைபெற்றது.
இந்த நிகழ்வில் புது கும்மிடிப்பூண்டி ஊராட்சி துணைத் தலைவர் எம்.எல்லப்பன் உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட அதிமுக நிர்வாகிகள் பங்கேற்று முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவ படத்துக்கு மாலை அணிவித்து மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
0 Comments