திருவள்ளூர் வடக்கு மாவட்டம் கழகம் சார்பில் முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதா நினைவு நாளை ஒட்டி நடைபெற்ற கிரிக்கெட் போட்டியில் வெற்றி பெற்ற வீரர்களுக்கு மாவட்ட செயலாளர் சிறுனியம்.பி, பலராமன் கோப்பை மற்றும் பரிசு தொகை வாங்கினார்


திருவள்ளூர் வடக்கு மாவட்ட அதிமுக சார்பில் பழவேற்காடு பகுதிக்கு உட்பட்ட மீனவ கிராமத்தில் மாண்புமிகு  முன்னாள் முதலமைச்சர் செல்வி ஜெ ஜெயலலிதாவின் அவர்களின் எட்டாம் ஆண்டு நினைவு நாளை  ஒட்டி மாபெரும் லப்பர் பந்து கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. 

இதில் சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் வடக்கு மாவட்ட கழக செயலாளரும் முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினருமான சிறுணியம் பலராமன் கலந்து கொண்டு போட்டியை தொடக்கி வைத்தார் தொடர்ந்து பேட்டை பிடித்து பந்தை அடித்து வீரர்களை உற்சாகப்படுத்தினார் தொடர்ந்து  வெற்றி பெற்ற வீரர்களுக்கு பரிசு கோப்பையும் ரொக்கத்தையும் வழங்கினார்.

 முதல் பரிசு பெற்ற கோரைகுப்பம் வென்ற அணிக்கு கோப்பையும் மற்றும் 25 ஆயிரம் ரொக்கமும் வழங்கப்பட்டது தொடர்ந்து இரண்டாம் இடம் பெற்ற பாக்கம் பணிக்கு  கோப்பை மற்றும் 15000 ரொக்கம் மற்றும்  மூன்றாம் நான்காம் இடம் பெற்ற அணைக்கு தலா பத்தாயிரம் வழங்கப்பட்டது  இதில் ஒன்றிய கவுன்சர்கள் சுமித்ரா குமார், செல்வழகி எர்ணாவூரான் மீஞ்சூர் ஒன்றிய செயலாளர் முத்துக்குமார்உள்ளிட்ட கழக நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments