கீழ வெண்மணியில் காங்கிரஸ் கட்சியினர் வீரவணக்கம் செலுத்தி அஞ்சலி


கூலி உயர்வு கேட்ட காரணத்தினால் நிலபிரபுத்துவ ஆதிக்க சக்திகளால் 1968 ஆண்டு டிசம்பர் 25 ஆம் நாள் ஒரே குடிசையில் எரித்து கொல்லப்பட்ட பட்டியலின விவசாய கூலி தொழிலாளர்களான 44 கீழவெண்மணி தியாகிகளின் 56 ஆம் ஆண்டு நினைவு நாளான இன்று (25-12-2024) கீழவெண்மணி நினைவிடத்திற்கு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சி சார்பில் நாகப்பட்டினம் மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் வழக்கறிஞர் ஆர்.என்.அமிர்தராஜா தலைமையில் கட்சியினர் நேரில் சென்று மலர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

நிகழ்வில் மாவட்ட காங்கிரஸ் எஸ்.சி துறைத் தலைவர் ஜே.கே.டி.ராஜ்குமார்,கீழ்வேளூர் வட்டார காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.லியோ,கீழ்வேளூர் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் எஸ்.ராதாகிருஷ்ணன் ஆகியோர் உள்ளனர்.

மக்கள் நேரம் எடிட்டர் நாகை மாவட்ட நிருபர் 

ஜி .சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments