திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் கார்த்திகை தீபத் திருவிழா இன்று காலை கொடியேற்றத்துடன் கோலாகலமாக துவங்கியது.இதையொட்டி, தங்க கொடிமரம் அருகே சிறப்பு அலங்காரத்தில் அண்ணாமலையார், உண்ணாமுலை அம்மன் மற்றும் பராசக்தி அம்மன் எழுந்தருளினர்.கோவில் வளாகத்தில் திரண்டிருந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் முன்னிலையில், தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார் கொடியேற்றினார்.
வரும் டிசம்பர் 13ம் தேதி திருக்கார்த்திகை தினத்தில் காலை 9 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு 2,668 அடி உயரம் கொண்ட மலை மீது மகா தீபம் ஏற்றப்படும்.மகா தீபத்தை தரிசிக்க, நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளிநாடுகளில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருவார்கள். இதனால் ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகிறது.
0 Comments