செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நெரும்பூர் கிராமத்தில் ராஜசேகர் (42) என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு திருமணம் ஆகி அமுல் (38) என்ற மனைவியும் இரு மகன்களும் இருக்கிறார்கள். இதில் ராஜசேகரின் தாயார் லட்சுமி (58) சொந்தமாக நெல் அறுவடை இயந்திரம் வைத்து தொழில் செய்து வரும் நிலையில் இதற்காக அடிக்கடி வெளி மாநிலங்களுக்கு சென்று பல மாதங்கள் தங்கி விட்டு வருவார்.
இந்நிலையில் அமுலுக்கு அதே பகுதியை சேர்ந்த சரவணனுடன் (42) தகாத உறவு இருந்துள்ளது. இந்த விவகாரம் லட்சுமிக்கு தெரிய வந்த நிலையில் தன் மருமகளை கண்டித்துள்ளார். இதனால் மருமகள் மாமியார் இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்ட நிலையில் கடந்த செவ்வாய்க்கிழமை லட்சுமி வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.
இது தொடர்பாக திருக்கழுகுன்றம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்திய நிலையில் லட்சுமி பிரேத பரிசோதனை அறிக்கை வெளியானது. அந்த அறிக்கையில் லட்சுமியை கழுத்தை நெரித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்டது தெரியவந்துள்ள நிலையில் உடம்பில் காயங்கள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
இந்த தொடர்பாக காவல்துறையினர் விசாரித்ததில் கள்ளத் தொடர்பு விவகாரம் தெரிய வந்த நிலையில், அமுல் அவருடைய தோழி பாரதி மற்றும் சரவணன் ஆகிய மூன்று பேரும் சரணடைந்துவிட்டனர். அவர்கள் மூவரும் சேர்ந்து கள்ளக்காதலை கண்டித்ததால் லட்சுமியை கழுத்தை நெரித்து கொலை செய்து தூக்கில் தொங்க விட்டதாக ஒப்புக்கொண்டனர். மேலும் இதைத் தொடர்ந்து மூவரையும் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
0 Comments