வெள்ளத்தில் சிக்கிய குடும்பங்களுக்கு கெட்டுப்போன உணவு வழங்கிய திராவிட மாடல் கட்சியினர்..... கொந்தளித்த பொதுமக்கள்

 


விழுப்புரம் மாவட்டம் அரக்கண்ட நல்லூர் ஊராட்சியில் தென்பண்ணை, துரிஞ்சல் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதோடு அங்கு வசித்து வரும் 2000 குடும்பங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. இங்கு 2 நாட்கள் ஆகியும் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தராமல் அதிகாரிகள் இருந்துள்ளனர். மேலும் ஊராட்சி சார்பில் துர்நாற்றம் வீசும் உணவு பொருட்கள் வழங்கப்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர். இந்நிலையில் 2 நாட்களாக வெள்ளத்தால் அவதிப்பட்ட மக்களுக்கு பேரூராட்சி மூலம் கெட்டுப்போன உணவுகளும், தண்ணீர் கூட வழங்காமல் இருந்துள்ளதாக பொதுமக்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

அதோடு குழந்தைகள் முதியவர்கள் உயிருக்கு போராடுவதாக கூறி தங்களது வேதனையை பொதுமக்கள் வெளிப்படுத்தி உள்ளனர். இதனையடுத்து தி.மு.க பேரூராட்சி தலைவர் அன்பு, தி.மு.க நகர செயலாளர் சுந்தரமூர்த்தி ஆகியோரை எதிர்த்து முற்றுகையிட்டு வாக்குவாதத்திலும் பொதுமக்கள் ஈடுபட்டுள்ளனர். மேலும் “எங்களை நாங்களே பார்த்துக் கொள்கிறோம் எங்களுக்கு யாரும் தேவையில்லை” என்று ஆக்ரோஷமாகவும் கோபத்தை வெளிப்படுத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Post a Comment

0 Comments