முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் மறைவு...... பிரதமர் மோடி நேரில் அஞ்சலி

 


மன்மோகன் சிங் இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் உறுப்பினராவார். இந்தியாவின் 14 வது பிரதமராக தேர்ந்தெடுக்கப்பட்டவர். நீண்ட காலம் பிரதமராக பதவி வகித்த பெருமையும் இவருக்கு உண்டு. இவர் இந்தியாவின் சிறந்த பொருளியலாளர் மற்றும் கல்வியாளர் ஆவார். இவரது பதவிக்காலம் 2004 ஆம் ஆண்டு முதல் 2014 வரை 10 ஆண்டுகள் இந்திய பிரதமராக பதவி வகித்தார். இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் வரை பாராளுமன்றத்தின் மாநிலங்களவை உறுப்பினராக செயல்பட்டு வந்தார்.

பின்னர் வயது மூப்பின் காரணமாக வீட்டில் ஓய்வில் இருந்த அவருக்கு அவ்வபோது உடல் நலக்குறைவு ஏற்பட்டு வந்தது. இருதய அறுவை சிகிச்சை இரண்டு முறை செய்துள்ளார். நேற்று இரவு திடீரென உடல் நலக்குறைவால் குடும்ப உறுப்பினர்களால் எய்ம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட மன்மோகன் சிங் தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை மேற்கொண்டும் சிகிச்சை பலனின்றி நேற்று இரவு 9:45 மணிக்கு உயிரிழந்தார். அவருக்கு தற்போதைய வயது 92 ஆகும்.

இந்த நிலையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டில் மன்மோகன் சிங் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இதனிடையில் டெல்லியில் உள்ள அவரது வீட்டிற்கு பிரதமர் நரேந்திர மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித் ஷா, மத்திய அமைச்சர் ஜேபி நட்டா ஆகியோர் இறுதி அஞ்சலி செலுத்துவதற்காக சென்றுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி மற்றும் பிற அமைச்சர்கள்  மன்மோகன் சிங்கின் உடலுக்கு மரியாதை செலுத்தி விட்டு அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினர்.முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் இறப்பை இந்திய அரசு 7 நாட்கள் துக்க நாளாக அனுசரித்துள்ளது.

Post a Comment

0 Comments