பத்திரிகையாளர்கள் பணியின்போது மரணமடைந்தால் வழங்கப்படும் நிவாரண நிதியை உயர்த்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு

 


தமிழக அரசு தற்போது பத்திரிகையாளர்களின் குடும்ப நிதியை உயர்த்தி அறிவித்துள்ளது. அதாவது பத்திரிகையில் 20 வருடங்கள் வரை பணிபுரிந்து மரணம் அடைந்தால் அவர்களின் குடும்பத்தினருக்கு இனி 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

அதன்பிறகு 15 ஆண்டுகள் பணிபுரிந்து மரணமடைந்தால் 7.5 லட்ச ரூபாயும், 10 வருடங்கள் வரை பணிபுரிந்து மரணம் அடைந்தால் 5 லட்ச ரூபாயும், 5 வருடங்கள் வரை பணிபுரிந்து உயிரிழந்தால் 2.5 லட்சம் ரூபாயும் வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் நிதி உதவியை உயர்த்தி வழங்க வேண்டும் என்று சென்னை பத்திரிக்கையாளர் மன்றத்தினர் கோரிக்கை விடுத்த நிலையில் 24 மணி நேரத்தில் முதல்வர் ஸ்டாலின் அதனை ஏற்று பல மடங்கு வரை நிதி உதவியை உயர்த்தி உத்தரவிட்டுள்ளார்.

Post a Comment

0 Comments