கரூர்: தலையில்லாமல் கிடந்த ரவுடியின் சடலம்...?

 


கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரம் அருகேயுள்ள மேட்டு மகாதானபுரத்தில் இரட்டை வாய்க்கால் அமைந்துள்ளது. இங்கு தலை துண்டிக்கப்பட்ட நிலையில் கைகள் மற்றும் கால்களில் கத்தியால் குத்தப்பட்ட காயங்களுடன் ஆண் சடலம் ஒன்று கிடந்துள்ளது. இந்நிலையில் அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பெயரில் குளித்தலை டி.எஸ்.பி லாலாபேட்டை இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை கைப்பற்றி உடற்கூறு பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். 

மேலும் இது குறித்து தீவிர விசாரணை மேற்கொண்டும் வந்துள்ளனர். அந்த விசாரணையில் அவர் அரவக்குறிச்சி அருகே உள்ள இனங்கனுரை சேர்ந்த காளிதாஸ் என்பது தெரிய வந்தது. இவர் மீது பல்வேறு கொள்ளை, கொலை வழக்குகள் உள்ளதாகவும், ரவுடி பட்டியலில் அவர் பெயர் வைக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

மேலும் சிறையிலிருந்த காளிதாசிற்கு மகாதானபுரத்தை சேர்ந்த கைதிகள் சிலருடன் பழக்கம் ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து அவர்களை சந்திக்க காளிதாஸ் மகாதானபுரம் வந்து சென்றதாக கூறப்படுகின்றது. பின்னர் மது அருந்தும் போது ஏற்பட்ட தகராறில் காளிதாஸ் கொல்லப்பட்டு இருக்கலாம் எனவும் காவல்துறையினர் சந்தேகிக்கின்றனர். 

அதோடு கொல்லப்பட்டவரின் தலையையும், குற்றவாளிகளையும் காவல்துறையினர் வலை வீசி தேடி வருகின்றனர். அது மட்டுமல்லாது காளிதாஸ் அடிக்கடி இராமநாதபுரம் சென்று வருவார் எனவும் கூறப்படுகின்றது. இந்நிலையில் கொல்லப்பட்டவரின் தலை கிடைத்த பின்பே எதையும் உறுதியாக கூற முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். மேலும் குற்றப்பிரிவு குழுவினர் இது குறித்து தீவிர விசாரணையும் மேற்கொண்டு வருகின்றனர்.

Post a Comment

0 Comments