கடையநல்லூர் அரசு கலை கல்லூரியில் நடைபெற்ற ஹாக்கி போட்டியில் திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி வெற்றி


மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம்  கல்லூரிகளுக்கு இடையிலான பெண்கள் ஹாக்கி போட்டி கடையநல்லூர் அரசு கலை மற்றும் அறிவியல்  கல்லூரியில் டிசம்பர் 20 மற்றும் 21 ஆகிய இரு தினங்கள் கடையநல்லூர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மைதானத்தில் வைத்து நடத்தியது இப்போட்டியில் 10 கல்லூரிகள் கலந்து கொண்டு விளையாடின அரை இறுதி  போட்டிக்கு திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி ,சாரா டக்கர் கல்லூரி, தூத்துக்குடி st.மேரிஸ் கல்லூரி கோவில்பட்டி GVN கல்லூரி தகுதி  பெற்றது.

 மூன்றாவது மற்றும் நான்காவது இடத்திற்கான போட்டியில் தூத்துக்குடி st.மேரிஸ் அணியினர் 5-0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று தூத்துக்குடி st. மேரிஸ் அணி மூன்றாவது இடமும் கோவில்பட்டி GVN கல்லூரி அணி நான்காவது இடமும் பெற்றது இறுதி போட்டியில் திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரி 2-1  என்ற கோல் கணக்கில் திருநெல்வேலி சாரா டக்கர் அணியினரை வெற்றி பெற்று முதல் இடத்தை தக்க வைத்துக் கொண்டது.

 பின்னர் நடைபெற்ற பரிசளிப்பு விழாவில்  கடையநல்லூர் அரசு கலை கல்லூரி முதல்வர் முனைவர் விக்டோரியா தங்கம் தலைமை தாங்கினார் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறை இயக்குனர் முனைவர் ஆறுமுகம் முன்னிலை வகித்தார் சிறப்பு விருந்தினராக வாய்ஸ் ஆப் தமிழ்நாடு நிறுவனர் ஆனந்தன் ஐயாசாமி அவர்கள் கலந்துகொண்டு வெற்றி பெற்ற அணியினருக்கு கோப்பைகளை வழங்கி சிறப்பித்தார்கள்.

 விழாவில் ஹாக்கி பயிற்சியாளர் பெருமாள் சேர்ந்தமரம்  st.ஜோசப் பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் செல்வி செல்வ பிரபா கடையநல்லூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜகோபால் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

 இப் போட்டியில் சிறப்பாக விளையாடிய வீராங்கனைகளை மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக பெண்கள் ஹாக்கி அணிக்காக வீராங்கனைகளை தேர்வு செய்யப்பட்டது. தேர்வுக்குழு உறுப்பினர்களாக கோவில்பட்டி GVN கல்லூரி உடற் கல்வி இயக்குனர் கோதை அம்மாள் ராணி அண்ணா கல்லூரி உடற் கல்வி இயக்குனர் நிஷா சங்கரன் கோயில் PMT கல்லூரி உடற்கல்வி இயக்குனர் முத்துக்குமார் ஆகியோர் செயல்பட்டனர் முன்னதாக அரசு கல்லூரி தமிழ் துறை பேராசிரியை பிரேமா அனைவரையும் வரவேற்றார் இறுதியில் அரசு கல்லூரி உடற் கல்வி இயக்குனர் முனைவர் குரு சித்திர சண்முகம் பாரதி நன்றி உரையாற்றினார்.

 மற்றும் அரசு கல்லூரி பேராசிரியர்கள் வணிக நிர்வாகவியல் துறை தலைவர் முனைவர் பால் மகேஷ், கணித துறை பேராசிரியர் சரவணன் தமிழ் துறை பேராசிரியர் முத்துராஜ் ஆங்கிலத்துறை பேராசிரியை பேபி மாலினி, சண்முகப்பிரியா அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உடற் கல்வி ஆசிரியர் குமார சேகர்  ஆகியோர் கலந்து கொண்டனர். போட்டியில் நடுவர்களாக காளிதாஸ், சிவானந்த், மதன்குமார், ரமேஷ் கண்ணா, சுபத்ரா தேவி, ஆகியோர் செயல்பட்டனர் பல்கலைக்கழக அணிக்காக தேர்வு செய்யப்பட்ட வீராங்கனைகள் பின்வருமாறு திருநெல்வேலி ராணி அண்ணா கல்லூரியிலிருந்து காளியம்மாள், ரஞ்சனி, கஜிதா பாரதி, முப்புடாதி, மதனா, ரமா, சந்திரலேகா, தூத்துக்குடி St.மேரிஸ் கல்லூரியில் இருந்து பிரியதர்ஷினி, விஜயலட்சுமி, காயத்ரி, கோவில்பட்டி GVN கல்லூரியில் இருந்து பிரியதர்ஷினி  கோவில்பட்டி K R கல்லூரியில் இருந்து சண்முகப்பிரியா  மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழக விளையாட்டு துறையில் இருந்து விமலா , அழகு சுபா திருநெல்வேலி சாரா டக்கர் கல்லூரியிலிருந்து சில்பா , ஹரி பிரபா, மகேஸ்வரி, எஸ்தர்,இன்று  (22.12.24) மாலை முதல் பயிற்சி முகாம் திருநெல்வேலி st.சேவியர்ஸ் கல்லூரியில் வைத்து நடைபெற இருக்கிறது 26 ஆம் தேதி திருச்சிராப்பள்ளியில்  அண்ணா விளையாட்டு அரங்கில் பாரதிதாசன் பல்கலைக்கழகம் சார்பாக நடத்தப்படும் தென் மண்டல அளவிலான பெண்கள் ஹாக்கி போட்டி டிசம்பர் 26 முதல் 30ஆம் தேதி வரை நடைபெற இருக்கிறது .

இப்போட்டியில் நமது மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகம் கலந்து கொண்டு விளையாட இருக்கிறது  பல்கலைக்கழக ஆக்கிய அணியின் பயிற்சியாளராக தங்கராஜ் அணி மேலாளராக அருணாச்சல வடிவு ஆகியோர் செயல்படுகின்றனர்.

Post a Comment

0 Comments