நாகை அருகே செம்பியவேளூர் கிராமத்தில் திடீரென தீ பற்றிய குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசம்...... சுமார் ஐந்து லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து சேதம்
நாகப்பட்டினம் மாவட்டம் திருக்குவளை தாலுக்கா செம்பியவேலூர் கிராமத்தில் இரவு மோகன் என்பவரின் குடிசை வீடு எதிர்ப்பாராத விதமாக திடீரென பற்றி எரிந்தது உடனே பொதுமக்கள் தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர்.
தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் தீயினை கட்டுக்குள் கொண்டு வர பொதுமக்கள் அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைக்க முற்பட்டனர். இருப்பினும் காற்றின் வேகம் சற்று அதிகமாக இருந்ததால் குடிசை வீடு முற்றிலும் எரிந்து நாசமானது பின்னர் சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்புத் துறையினர் தீயினை அணைத்தனர்.
இதில் கட்டில், பீரோ, பிரிட்ஜ், நகை, குழுவில் கடன் பெற்ற 60 ஆயிரம் ரூபாய் பணம் உள்ளிட்ட சுமார் 5 லட்சம் மதிப்பிலான பொருட்கள் முற்றிலும் எரிந்து நாசமானது இந்த தீபத்து குறித்து திருக்குவளை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
நாகப்பட்டினம் செய்தியாளர் ஜி.சக்கரவர்த்தி 9788341834
No comments