கீழப்பாவூர் பேரூராட்சி, 17வது வார்டு பகுதியான சிவகாமிபுரத்தில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.7.60 லட்சம் மதிப்பீட்டில் 60 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட தரை மட்ட நீர்த்தேக்க அமைக்கப்படவுள்ளது. இதற்கான பணி தொடக்க விழா நடைபெற்றது.
பேரூராட்சி மன்ற தலைவர் பி.எம்.எஸ். ராஜன் தலைமை வகித்தார். பேரூராட்சி துணைத்தலைவர் ராஜசேகர், செயல் அலுவலர் மாணிக்கராஜ் முன்னிலை வகித்தனர். தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் வே.ஜெயபாலன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு, பணிகளை தொடங்கி வைத்து பேசினார்.
இவ்விழாவில் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் சீ.பொன்செல்வன், ராதா விநாயகப்பெருமாள், கோடீஸ்வரன்,மாலதி முருகேசன், ஜெயசித்ரா குத்தாலிங்கம், இசக்கிராஜ், அன்பழகு சின்னராஜா, ஜேஸ்மின் யோவான், விஜிராஜன், இசக்கிமுத்து, பவானிஇலக்குமண தங்கம், தேவஅன்பு, முத்துசெல்விஜெகதீசன், வெண்ணிலாதங்கச்சாமி, சாமுவேல்துரைராஜ், மற்றும் பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments