• Breaking News

    எனக்கு கணவராக வருபவரின் தகுதிகள் இதுதான்..... நடிகை ராஷ்மிகா மந்தனா

     


    ராஷ்மிகா மந்தனா தற்போது நாட்டின் முன்னணி நட்சத்திரங்களில் ஒருவராக உயர்ந்துள்ளார். அனிமல் மற்றும் புஷ்பா 2 படத்தின் வெற்றி அவரது புகழை வேறொரு நிலைக்கு கொண்டு சென்றுவிட்டது என்றே சொல்லலாம். அது அவரை இந்திய சினிமாவில் மிகவும் விரும்பப்படும் கதாநாயகிகளில் ஒருவராகவும் மாற்றியுள்ளது.

    இவரும் நடிகர் விஜய் தேவரகொண்டாவும் காதலிப்பதாக கிசுகிசுக்கள் வரும் நிலையில் தனக்கு கணவராக வருபவரின் தகுதிகளை ராஷ்மிகா பகிர்ந்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில்,

    'ஒரு உறவில் அன்பு, அக்கறை, நல்ல இதயம், வெளிப்படைத்தன்மை, உண்மை போன்றவை இருப்பது அவசியம். இது என்னிடம் இயல்பாகவே இருக்கிறது. என்னை போன்ற ஒத்த குணங்களைக் கொண்ட ஒருவர்தான் என் கணவராக வரவேண்டும் என்று விரும்புகிறேன்.எனது ஏற்ற தாழ்வுகள் அனைத்திலும் அவர் துணையாக நிற்க வேண்டும். நேர்மையாகவும், கவனத்துடனும், பொறுப்புடனும் இருக்க வேண்டும். ஒருவர் மீது ஒருவர் பொறுப்புணர்வோடு இருந்தால் வாழ்நாள் முழுவதும் சேர்ந்து இருக்கலாம். நம்முடன் யாருமே இல்லை என்றால் இந்த வாழ்க்கையை வாழ்ந்து என்ன பயன்?' என்றார்.

    No comments