வண்டலூர் கிரசண்ட் பல்கலைகழகத்தில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ் சர்வதேச சிறப்பு கருத்தரங்கு நடைப்பெற்றது


வண்டலூரில் உள்ள பி.எஸ்.ஏ கிரசண்ட் பல்கலைகழகம் சார்பில் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியல் துறை சார்பில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல் நிலைத்தன்மைக்கான ஸ்மார்ட் மெட்டீரியல்ஸ்" 2 நாள் சர்வதேச மாநாடு பல்கலை கழக வளாகத்தில் நடைப்பெற்றது.  

முதல்நாள் மாநாடு தொடக்க நிகழ்ச்சிக்கு பல்கலைகழக துணை வேந்தர் டாக்டர் டி.முருகேசன் தலைமை தாங்கினார். பல்கலைகழக பதிவாளர் ராஜா உசேன் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக அண்ணா பல்கலைக்கழகத்தின் புகழ்பெற்ற பேராசிரியரும்,  தொழில்நுட்ப அறிவியல் துறையின் முன்னாள் செயலருமான  பத்ம பூஷன்  மற்றும் பட்நாயக் விருது பெற்றவருமான டாக்டர் டி. ராமசாமி கலந்து கொண்டு சர்வதேச மாநாட்டினை தொடஙகி வைத்து சிறப்புரையாற்றினார்.

அப்போது அவர் கூறியதாவது:- 

சமூகத்திற்கு பாதிப்பு இல்லாத வகையில் கார்பன் டை ஆக்சைட்டின் அளவை குறைப்பது குறித்து மற்றும் பொருதாளரம் உயர்வதற்கான கண்டு பிடிப்பிகளில் முக்கியத்துவம் அளிக்க வேண்டும். அதற்காக நாம் அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்ற வேண்டும் என கேட்டுகொண்டார்.

அதனை தொடர்ந்து பல விரிவுரையாளர்கள் இயற்பியல் மற்றும் வேதியியல் அறிவியல் துறை சார்பில் பசுமை ஆற்றல் மற்றும் சுற்றுச்சூழல்  குறித்து மாணவர்களுக்கு பல கருத்துரைகளை எடுத்துரைத்தனர்.

இந்த நிகழ்ச்சியை இயற்பியல் மற்றும்  வேதியியல் மையத்தின் டீன் டாக்டர் ஐ. ராஜாமுகம்மது, இயற்பியல் துறை தலைவர் டாக்டர் ஜி.வி.விஜயராகவன், வேதியல் துறை தலைவர் டாக்டர் ந. ஹாஜராபிவி, நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர்கள் பேராசியர் எம்.முகம்மது ஷேக் சிராஜூதீன், பேராசியர் எம். ஆஷா ஜோன்சி ஆகியோர் ஏற்பாடு செய்திருந்தனர்.

இந்த நிகழ்ச்சியில் பல்வேறு பல்கலைகழகம் மற்றும் கல்லூரிகளை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments