நாகையில் புகையிலை விற்ற கடைக்கு சீல்

 


நாகப்பட்டினம், மருந்து கொத்தளம் ரோடு பகுதியில் இயங்கிவரும் கடைகளில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு வருவதாக வந்த அடிப்படையில், நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் அவர்கள் உத்தரவின்படி, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன் மற்றும் திருமருகல் வட்டார உணவு பாதுகாப்பு அலுவலர் எஸ்.ஆண்டனிபிரபு ஆகியோர் இன்று ( 04.12..24 ) ஆய்வு மேற்கொண்டனர். அப்போது அங்கு ஒரு கடையில் தமிழ்நாடு அரசால் தடைசெய்யப்பட்ட ரூபாய் முப்பது ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பொருட்கள் ( கூல்லிப்) ஒரு கடையில் கண்டறியப்பட்டு, கைப்பற்றப்பட்டது. உடனடியாக அந்த கடையை பூட்டி சீல் வைக்கப்பட்டது. 

மாநில உணவு பாதுகாப்பு ஆணையரின் உத்தரவுப்படி இதே நபரின் மூன்றாம் முறையாக நடைபெற்ற குற்றம் என்பதால், ரூபாய் ஒரு லட்சம் அபராதம் விதிக்கப்படுவதோடு, 3 மாதங்கள் கடை பூட்டப்படும். எனவே வணிக நிறுவனங்கள் நடத்துவோர் தயவுசெய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டுகிறோம். 

 தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார்  / தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். புகார்தாரர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும். 

மக்கள் நேரம் எடிட்டர் மற்றும் நாகை செய்தியாளர் சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments