டங்ஸ்டன் ஏலத்தை உடனடியாக ரத்து செய்ய வேண்டும்...... மத்திய அரசுக்கு நாட்டைக் காப்போம் அமைப்பு வழக்கறிஞர் சி.ஜே.ராஜன் கோரிக்கை


 "நாட்டைக்காப்போம்' அமைப்பின் அமைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே. ராஜன் இது குறித்து மத்திய அமைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில்,டங்ஸ்டன் உரிமம் வழங்கப்பட்ட மதுரை மாவட்டம் அரிட்டாப்பட்டி, அ.வல்லாளப்பட்டி பகுதியானது , குடைவரைக் கோவில்கள்,சமண சிற்பங்கள், தமிழ்ப் பிராமி வட்டெழுத்துகள், சமண படுக்கைகள் ஆகிய வரலாற்றுச் சின்னங்களையும் அரியவகை உயிரினங்களின் வாழ்வாதாரமான பகுதி. தமிழ்நாடு பல்லுயிரிய வகைமை வாரியத்தால் பாதுகாக்கப்பட்ட பகுதி.

மேலும், மதுரை அரிட்டாப்பட்டி மற்றும் சுற்று வட்டாரப் பகுதியானது பச்சைப்பசேல் என காட்சியளிக்கும் வயல்வெளிகள், வானுயர வளர்ந்து நிற்கும் மலைக்குன்றுகள், அரியவகை பறவைகள், பூச்சியினங்கள் மற்றும் விலங்குகள் என இயற்கை எழில் கொஞ்சும் அழகிய கிராமங்களைக் கொண்டது.

அரிட்டாப்பட்டி மற்றும் சுற்றுவட்டார கிராம மக்களின் வீரிய போராட்டத் தின் விளைவாக டங்ஸ்டன் சுரங்க உரிம ஏலத்தை ரத்து செய்ய நடுவன் அரசை வலியுறுத்தி,தமிழ்நாடு சட்டமன்றத்தில்  டிசம்பர் 9ம் தேதி அன்று தனித் தீர்மானம் கொண்டு வரப்பட்டது.

சட்டமன்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர்  கிராம மக்களை நாங்கள் நேரில் சந்தித்த போது "சட்ட மன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டாலும்  சுரங்க அனுமதிக்கான ஏலத்தை நடுவன் அரசு ரத்து செய்யும் வரையில்  எங்களது போராட்டம் தொடரும்"என அரிட்டாப்பட்டி  ஊராடதமிழ்நாடுதலைவர் வீரம்மாள்  உட்பட கிராம மக்கள் அனைவரும் ஒரே குரலில் தெரிவித்தனர்.

 தொல்லியல் மற்றும் வரலாற்று சின்னங்கள், தமிழிக் கல்வெட்டு, சமணர் படுக்கை, சமணர் பள்ளி,மாவீரர் சிற்பம் மற்றும் வட்டெழுத்து கல்வெட்டுகள், குடவரைக் கோயில்,முற்கால பாண்டியர் கோயில், பிற்கால பாண்டிய சிவன் கோயில், பெருங்கற்கால சின்னங்கள், தொன்மையான கண்மாய், பழமையான தர்கா மற்றும் பள்ளிவாசல், பாதுகாக்கப்பட்ட தொல்லியல் சின்னம்,தமிழ்நாடு வனத்துறையாலும், தமிழ்நாடு பல்லுயிரியல் வகைமை வாரியத்தாலும் பாதுகாக்கப்பட்ட பகுதி அத்தோடு குடியிருப்பு வீடுகள், பள்ளிக்கூடங்கள், விவசாய நிலங்கள், மேய்ச்சல் நிலங்கள், நீர்நிலைகள்  கொண்ட வரலாற்று சிறப்புமிக்க கிராமங்கள் இவை."எங்களுக்கு தெய்வங்களாக இருந்து  தலைமுறை தலைமுறையாக எங்களை பாதுகாத்து வரும்  எங்கள் மலை களையும், எங்களது விவசாய பூமி யையும் அழிக்க நினைப்பவர்களுக்கு எதிராக நாங்கள் உயிர் இருக்கும் வரை போராடுவோம்” என்பதுதான் கிராம மக்களின் கருத்தாக உள்ளது.

இந்த சூழலில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள டங்ஸ்டன் சுரங்க உரிமையை ரத்து செய்ய வேண்டும்.  தமிழ்நாடு சட்டமன்றம் நிறைவேற்றிய தீர்மானத்திற்கு மதிப்பளிக்க வேண்டும். பல்லுயிர், வரலாற்றுப் பாரம்பரியம்,  இடங்கள் மற்றும் அப்பகுதி மக்களின் வாழ்வாதாரங்களைப் பாதுகாக்க வேண்டும் என நாட்டைக் காப்போம் அமைப்பு மத்தியஅரசை,நாட்டைக்காப்போம் அமைப்பாளர் வழக்கறிஞர் சி.ஜே.ராஜன், வலியுறுத்தியுள்ளார்.

Post a Comment

0 Comments