வாசுதேவநல்லூர்: வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணி திட்டத்தில் மரம் நடும் விழா


வாசுதேவநல்லூர் ஊராட்சி ஒன்றியம், சுப்பிரமணியபுரம் கிராம ஊராட்சியில் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி சார்பாக நாட்டு நலப்பணி திட்டத்தில் மரம் நடும் விழா. விழாவில் நமது  வாசுதேவநல்லூர் ஒன்றிய பெருந்தலைவர், ஒன்றிய கழக செயலாளர் பொன் முத்தையா பாண்டியன் அவர்கள் தலைமையில் நடைபெற்றது.

  இந்நிகழ்வில் வியாசா கலை மற்றும் அறிவியல் கல்லூரி தாளாளர் வெள்ளத்துரை பாண்டியன், சுப்ரமணியபுரம் ஒன்றிய கவுன்சிலர் மகாலட்சுமி, ஊராட்சி மன்ற தலைவர் ராம்குமார், தென்மலை ஒன்றிய கவுன்சிலர் முனியராஜ், கிளைச் செயலாளர் தர்மர், கல்லூரி முதல்வர் ஈஸ்வரன், பள்ளி தலைமை ஆசிரியர் சிவகாமி, கோவில் நிர்வாகி தங்கராஜ், உள்ளார் மணிகண்டன், விக்கி, கழக உடன்பிறப்புகள் மாரியப்பன், குருசாமி மற்றும் கல்லூரி மாணவிகள், பொதுமக்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments