தமிழக ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்தார் தவெக தலைவர் விஜய்..... மனுவில் குறிப்பிட்டது என்ன..?

 


தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தற்போது தமிழக ஆளுநர் ஆர் என் ரவியை சந்தித்துள்ளார். அதாவது சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் மாணவி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட நிலையில் இது தொடர்பாக முறையான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஆளுநரை சந்தித்து விஜய் மனு கொடுத்துள்ளார். இந்த சந்திப்பிற்கு பிறகு தமிழக வெற்றி கழகத்தின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிக்கை வெளியிட்டார். அந்த அறிக்கையில், இன்று தமிழக வெற்றிக்கழகத்தின் தலைவர் விஜய் தலைமையில் ஆளுநர் ரவியை சந்தித்து மனு கொடுத்துள்ளோம்.

எங்கள் மனுவில்  தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க வேண்டும் எனவும், அனைத்து இடங்களிலும் பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் அண்மையில் பெய்த பருவமழை மற்றும் பெஞ்சல் புயல் காரணமாக பாதிக்கப்பட்ட மக்களுக்கு இன்னும் உரிய நிவாரணம் கிடைக்கவில்லை. எனவே மாநில அரசு கேட்கும் உரிய நிவாரணத் தொகையை ஒன்றிய அரசு வழங்க வேண்டும். மேலும் எங்கள் கோரிக்கைகளை கேட்டு ஆளுநர் அவற்றை பரிசீலிப்பதாக கூறியுள்ளார் என்று எழுதியுள்ளார்.

Post a Comment

0 Comments