காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள தாய் மூகாம்பிகை நகரில் கோபால் ராஜ் என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு பரமேஸ்வரி என்ற மனைவி இருந்துள்ளார். இந்த தம்பதியினருக்கு எட்டு மற்றும் ஆறு வயதில் இரண்டு மகள்கள் இருக்கின்றனர். நேற்று கோபால் ராஜ் தனது மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டதாக காவல் நிலையத்திற்கு செல்போன் மூலம் தகவல் தெரிவித்துள்ளார். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கோபால்ராஜ் கூறியதாவது, பரமேஸ்வரி பலருடன் தகாத உறவில் ஈடுபட்டு வந்தார்.
அவரை பலமுறை கண்டித்தேன். ஆனால் எனது மனைவியின் நடவடிக்கையில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை. அவர் வீடியோ கால் மூலம் தொடர்ந்து கள்ள காதலர்களிடம் பேசி வந்துள்ளார். இதனால் மன உளைச்சலில் என் மனைவியின் கழுத்தை நெரித்து கொலை செய்து விட்டேன் எனக் கூறியுள்ளார். மேலும் தனது இரு மகள்களையும் திருநின்றவூரில் இருக்கும் உறவினர் வீட்டில் விட்டுவிட்டு காவல் நிலையத்திற்கு வந்து தன்னுடைய போவதாக கூறினார். இதுகுறித்து அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பரமேஸ்வரியின் உடலை மீட்டு அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
0 Comments