• Breaking News

    சிறுமியை சீரழித்த இன்ஸ்டாகிராம் காதலனுக்குக்கு போலீசார் வலை

     


    கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள வல்லவிளை பகுதியில் ஜெர்வின்(21) என்பவர் வசித்து வருகிறார். இவரது பக்கத்து கிராமத்தில் பத்தாம் வகுப்பு படிக்கும் 14 வயது சிறுமி வசித்து வசித்து வருகிறார். இந்த நிலையில் ஜெர்மிக்கும் சிறுமிக்கும் இன்ஸ்டாகிராம் மூலம் பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது. இந்த நிலையில் ஜெர்வின் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தைகள் கூறி கடந்த செப்டம்பர் மாதம் சிறுமியை ஒரு பாழடைந்த கட்டிடத்திற்கு அழைத்துச் சென்று பலமுறை பாலியல் பலாத்காரம் செய்துள்ளார்.

    சமீபகாலமாக சிறுமி கடுமையான வயிற்று வலியால் அவதிப்பட்டு உள்ளார். இதுகுறித்து தாய் விசாரித்த போது சிறுமி நடந்தவற்றை கூறியுள்ளார். இதனை கேட்டு அதிர்ச்சியடைந்த சிறுமியின் தாய் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் தலைமறைவான ஜெர்வினை தேடி வருகின்றனர்.

    No comments