நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள இலுப்புலி கிராமத்தில் திருமணிமுத்தாறு கரையில் அணைக்காடு என்ற இடத்தில் 25 ஏக்கர் தென்னந்தோப்புக்குள் அண்ணன் தம்பிகளான கணேசன் கோமதி,மற்றும் பழனிவேலு, செல்வி குடும்பத்தார் வசித்து வந்தனர். இவர்களது மகளான மோனிஷா ஐந்து மாத கைக்குழந்தையுடன் இவர்களுடன் இருந்து வந்துள்ளார். இந்த நிலையில்கடந்த சில நாட்களாக சேலம் நாமக்கல்மாவட்டங்களில் பெய்த கன மழையின் காரணமாக திருமணி முத்தாற்றில் தண்ணீர் அதிகமாக சென்றது.
தோட்டத்திற்கு மறுபக்கத்தில் இருந்த ஓடையிலும் தண்ணீர் சென்றதால் ஓடைக்கும்ஆற்றுக்கும் இடைப்பட்ட பகுதியில் இவர்களது தென்னந்தோப்பு இருந்ததால் சுற்றிலும் தண்ணீரில் சூழப்பட்டு தீவு போல் மாறியது. அந்த நிலத்திற்கு சென்று வர உள்ள பாதையும் சமீப காலமாக பெய்த மழையின் காரணமாக துண்டிக்கப்பட்டு இருந்தது. இது குறித்து திருச்செங்கோடு வட்டாட்சியர் விஜயகாநதுக்கு தகவல் கிடைத்தது இதனை அடுத்து வட்டாட்சியர் விஜயகாந்த் திருச்செங்கோடு தீயணைப்பு மற்றும் மீட்பு துறைக்கு தகவல் கொடுத்து தீயணைப்புத் துறையினர் பரிசலில் சென்று அந்த தீவுப் பகுதியில் மாட்டியிருந்த மோனிஷா செல்வி கோமதி ஆகிய மூன்று பேருடன் 5 மாத பெண் குழந்தையும் மீட்டனர்.
ஜெ.ஜெயகுமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர்
0 Comments