விண்வெளியில் கிறிஸ்துமஸ் கொண்டாடிய சுனிதா வில்லியம்ஸ்..... நெட்டிசன்களின் கேள்வியும்..... நாசாவின் பதிலும்

 


விண்வெளியில் சுனிதா வில்லியம்ஸ் கிறிஸ்துமஸ் கொண்டாடினார். இது குறித்த வீடியோ வெளியான நிலையில், நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேள்வி எழுப்பினர். இதற்கு நாசா விளக்கம் அளித்து உள்ளது.

ஜூன் மாதம் 5ம் தேதி ஆய்வுக்காக சர்வதேச விண்வெளி மையத்திற்கு நாசா விண்வெளி வீரர்களான சுனிதா வில்லியம்ஸ் மற்றும் புட்ச் வில்மோர் ஆகிய இருவரும் போயிங் ஸ்டார் லைனர் விண்கலத்தில் சென்றனர். ஆனால், விண்கலத்தில் ஏற்பட்ட தொழில்நுட்ப கோளாறு காரணமாக இருவரும் பல மாதங்களாக சர்வதேச விண்வெளி நிலையத்தில் சிக்கி உள்ளனர். அவர்கள் அடுத்த ஆண்டு தான் பூமிக்கு திரும்புவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், விண்வெளி நிலையத்தில் அவர்கள் கிறிஸ்துமஸ் கொண்டாடிய வீடியோவை நாசா அமைப்பு சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டது. இதனை பார்த்த, நெட்டிசன்கள் அடுத்தடுத்து கேள்விக்கணைகளை தொடுத்தனர்.

*விண்வெளி நிலையத்தில் நீண்ட நாட்கள் தங்கியிருப்போம் என அவர்களுக்கு தெரியுமா

*கிறிஸ்துமஸ் அலங்காரத்திற்கு தேவையான பொருட்களை நீண்ட நாட்களுக்கு முன்னரே கொண்டு வந்து விட்டீர்களா

*8 நாட்கள் மட்டுமே விண்வெளி பயணம் என சொன்னவர்களிடம் எப்படி தொப்பிகள் வந்தன

*கிறிஸ்துமஸ் தொப்பிகள், அலங்காரங்களை யார் விநியோகம் செய்தது என அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பினர்.

இதனையடுத்து நாசா அமைப்பானது வீடியோ குறித்து விளக்கம் ஒன்றை வெளியிட்டது. அதில், கடந்த நவம்பர் மாதம், இந்த கிறிஸ்துமஸ் மரம் மற்றும் அலங்கார பொருட்கள் ஸ்பேஸ் எக்ஸ் மூலம், அனுப்பி வைக்கப்பட்டது. அதில், வான்கோழி, உருளைக்கிழங்கு, காய்கறிகள், துண்டுகள் மற்றும் குக்கீகள் உள்ளிட்ட கிறிஸ்துமஸ் உணவுகளும் இருந்தன. இது தவிர, சில அறிவியல் பொருட்களும் இருந்தன. இவ்வாறு அதில் நாசா கூறியுள்ளது.

Post a Comment

0 Comments