தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் முடிவடைந்த நிலையில் இன்று முதல் பள்ளிகளுக்கு விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று முதல் ஜனவரி 1ஆம் தேதி வரை அனைத்து பள்ளிகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டநிலையில் ஜனவரி 2ஆம் தேதி வழக்கம் போல் பள்ளிகள் மீண்டும் செயல்படும் என்று பள்ளி கல்வித்துறை அறிவித்துள்ளது.
இந்நிலையில் பொதுவாக விடுமுறைகளில் சிறப்பு வகுப்புகள் நடத்தப்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுவது வழக்கம்.இதன் காரணமாக தற்போது அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளி கல்வித்துறை ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
அதாவது விடுமுறை தினத்தில் சிறப்பு வகுப்புகளை மாணவர்களுக்கு நடத்தக்கூடாது என்று பள்ளிக்கல்வித்துறை அதிரடியாக அறிவித்துள்ளது. மேலும் அறிவிப்பை மீறி சிறப்பு வகுப்புகள் நடத்துவது தெரிய வந்தால் சம்பந்தப்பட்ட பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று பள்ளிக்கல்வித்துறை எச்சரித்துள்ளது.
0 Comments