கடையநல்லூரில் தென்காசி தெற்கு மாவட்ட திமுக இளைஞரணி, டவுன் ஸ்போர்ட்ஸ் கிளப் மற்றும் எவரெஸ்ட் கல்வி குழுமம் இணைந்து மாண்புமிகு துணை முதல்வர் உதயநிதி பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட அளவிலான கிரிக்கெட் போட்டிகள் நடந்தது.எவரெஸ்ட் விளையாட்டு மைதானத்தில் நடந்த போட்டிக்கு முன்னாள் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆடிவேல், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கிருஷ்ணராஜா ஆகியோர் போட்டிகளை துவக்கி வைத்தனர்.
துவங்கிய போட்டிகள் வரும் 2ம் தேதி வரையும், தொடர்ந்து 5, 6 மற்றும் 11, 12 தேதிகளில் நடக்கிறது. இதில் பாவூர்சத்திரம், சுரண்டை, வடநத்தம்பட்டி, புளியங்குடி, கடையநல்லூர், தென்காசி, ஆலங்குளம் உள்ளிட்ட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து 16 அணிகள் பங்கேற்கின்றன. போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளும் பாராட்டு சான்றிதழும் வழங்கப்படுகிறது.
0 Comments