தமிழக வெற்றி கழகத்தில் தூத்துக்குடி மாவட்ட பொறுப்பாளர்கள் என்று யாரும் கிடையாது ஜனவரி மாதம் தான் யார் மாவட்ட பொறுப்பாளர் என்று தெரியும் தூத்துக்குடியில் மாவட்ட பொறுப்பாளர்கள் என்று பலரும் சொல்லிக் கொள்ளும் நிலையில் இன்று தூத்துக்குடியில் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கிய மாவட்ட தலைமை நிர்வாகி எஸ் டி ஆர் சாமுவேல் செய்தியாளர்களுக்கு பேட்டி
தூத்துக்குடி சேர்ந்த குத்துச்சண்டை வீரராக தக்சன் என்ற மாணவர் பள்ளி மாணவர்களுக்கிடையான குத்துச் சண்டை போட்டியில் விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடைபெற்ற 14 வயதிற்கு உட்பட்ட (38-40) கிலோ எடை பிரிவு தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த தருண் சஞ்சய் வெற்றி பெற்று தூத்துக்குடி மாவட்டத்திற்கு பெருமை சேர்த்துள்ளார் இவர் தூத்துக்குடி பி எம் சி மேல்நிலைப்பள்ளி படித்து வருகிறார் மேலும் இவர்தேசிய அளவில் குத்துச்சண்டை போட்டிக்கு தகுதி பெற்றுள்ளார் தேசிய அளவில் வெற்றி பெற்று தூத்துக்குடி திரும்பி உள்ளதை தொடர்ந்தும்,
அதேபோல் தூத்துக்குடியைச் சேர்ந்த தர்ஷினி என்ற மாணவி சிலம்பம் 60 கிலோ எடை பிரிவில் முதல் பரிசு தொடு முறை சிலம்பம் போட்டியில் மாநில அளவில் வெற்றி பெற்று தூத்துக்குடி திரும்பியதை தொடர்ந்தும் இருவருக்கும் நினைவுப் பரிசு வழங்கிய தூத்துக்குடி மாவட்ட தமிழக வெற்றிக்கழக தலைமை நிர்வாகி எஸ் டி ஆர் சாமுவேல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது தமிழக வெற்றி கழகம் விளையாட்டு போட்டிகளுக்கும் விளையாட்டு வீரர்களுக்கும் முக்கியத்துவம் கொடுக்கும் கட்சியாகும் எனவே இந்த விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகள் வழங்கி அவர்களை ஊக்குவித்துள்ளோம்.திமுக அதிமுகவிலிருந்து முக்கிய பொறுப்புகளில் இருக்கக்கூடிய இருந்தவர்கள் முன்னாள் கவுன்சிலர்கள் என பலரும் எங்கள் கட்சியில் ஆர்வமுடன் இணைந்து வருகின்றனர்.
இப்போதைக்கு தூத்துக்குடியில் ஒரு லட்சம் பேர் எங்களது கட்சியில் இணைந்துள்ளனர்.குறிப்பாக இளைஞர்கள் இளம் கன்னியர்கள் எங்களது கட்சியில் ஆர்வமாக இணைந்து வருகின்றனர்.நாங்கள் எல்லோரும் ஒற்றுமையாக வேலை செய்ய தளபதி சொல்லி உள்ளார் அவரது பேச்சைக் கேட்டு வேலை செய்து வருகிறோம்.
ஜனவரி மாதம் தான் யார் மாவட்ட பொறுப்பாளர் என்ற அறிவிப்பை தளபதி மற்றும் பொதுச் செயலாளர் ஆகியோர் தெரிவிப்பார்கள் இதுவரை மாவட்ட பொறுப்பாளர்கள் என்று யாருக்கும் பொறுப்பு கொடுக்கப்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
தூத்துக்குடியில் ஏற்கனவே அஜிதா என்ற பெண்மணியும், ஓட்டப்பிடாரத்தை சேர்ந்த பாலா என்ற நபர் உட்பட 2 பேர் தங்களை மாவட்ட பொறுப்பாளர்கள் என்று கூறிக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தூத்துக்குடி மாவட்ட தலைமை நிர்வாகியாக தலைமையால் அறிவிக்கப்பட்டு கட்சிப் பணிகளை மேற்கொண்டு வரும் எஸ் டி ஆர் சாமுவேல் தூத்துக்குடியில் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி பல்வேறு மக்கள் பிரச்சனைகளை முன்னெடுத்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 Comments