ஈரோடு மாவட்டம் , கோபிசெட்டிபாளையம் அருகே உள்ள காசி பாளையம் பகுதியில் தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் உறுப்பினர் 35 வயதான ராம்கி என்பவர் 26.12 2024 அன்று இரவு 8 மணி அளவில் காசிபாளையம் பெட்ரோல் hp பங்கில் அவரது ஈச்சர் வாகனத்திற்கு டீசல் போட்டுவிட்டு டிரைவரை வைத்து கேரளாவுக்கு லோடு அனுப்பிவிட்டு அங்குள்ள தண்ணீர் குழாயில் கை கால் கழுவும் போது சரியான முறையில் பராமரிக்கப்படாமல் இருந்த மின் ஒயரில் மின்சாரம் கசிந்து தூக்கி வீசப்பட்டு அகால மரணம் அடைந்தார்.
தற்போது அவரது உடல் கோபி GH பிணவறையில் உள்ளது மேற்படி இன்று தமிழக நாடார் மக்கள் முன்னேற்ற சங்கத்தின் நிறுவனத் தலைவர் திரு பொன் விஸ்வநாதன் நாடார் மாநில மாவட்ட ஒன்றிய நகர மற்றும் வழக்கறிஞர் அணி நிர்வாகிகள் இறந்தவரின் உறவினர்கள் 300க்கும் மேற்பட்டோர் சம்பவம் நடந்த இடத்திற்கு பார்வையிட்டு வந்து நம்பியூர் ஒன்றியம் கடத்தூர் காவல் நிலையம் சென்று சம்பந்தப்பட்ட பங்க் உரிமையாளர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு பேச்சுவார்த்தை நடத்தி நிவாரணமும் பெற்றுக் கொடுத்து பெட்ரோல் பங்க் நிர்வாகத்தின் மீது வழக்கும் தொடரப்பட்டுள்ளது.
மக்கள் நேரம் இணைய தளம் செய்திகளுக்காக ஈரோடு மாவட்ட செய்தியாளர் சிவன் மூர்த்தி
0 Comments