• Breaking News

    பணி முடித்து வந்த ராணுவ வீரருக்கு உற்சாக வரவேற்பு


    நாமக்கல் மாவட்டம் மல்லசமுத்திரம் அடுத்த வையப்பமலை கருங்கல்பட்டி அண்ணாநகரில், ராணுவத்தில் பணியாற்றி பணிஓய்வு பெற்றுவந்த ராணுவவீரருக்கு ஊர்பொதுமக்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

    நாமக்கல் மாவட்டம், மல்லசமுத்திரம் அருகேயுள்ள, கருங்கலபட்டி அக்ரஹாரம் கிராமம், அண்ணாநகரில் வசித்துவரும் பூவாடன்85, குஞ்சம்மாள்80 தம்பதியினரில் 4வது மகன் முத்துசாமி48. கடந்த 2000நவ.8 ல் இந்திய ராணுவத்தில் பணியில் சேர்ந்தார். ஜம்முகாஷ்மீர் [கார்கில்], அருணாச்சலபிரதேசம், மும்பை, கொல்கத்தா, உத்திரபிரதேசம், பஞ்சாப், கேரளா உள்ளிட்ட மாநிலங்களில் பணியாற்றினார். இந்நிலையில் கடந்த நவ.30ல் பணியில் இருந்து ஓய்வுபெற்றார்.

     நேற்று சொந்த ஊருக்கு திரும்பிய ராணுவ வீரருக்கு ஊர்பொதுமக்கள் சார்பாக மேள, தாளத்துடன்இனிப்பு வழங்கி பட்டாசு வெடித்து மாலை, சால்வை அணிவித்து உற்சாக வரவேற்பு அளித்தனர். இவருக்கு, ராஜேஸ்வரி41 என்ற மனைவியும்இவர் மல்லசமுத்திரம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆசிரியராக பணிபுரிந்து வருகிறார்மேலும், வைஷ்ணவி17 என்ற மகளும் உள்ளனர்.

     ஜெ.ஜெயக்குமார் நாமக்கல் மாவட்ட செய்தியாளர் 


    No comments