செங்கல்பட்டு மேற்கு மாவட்டம் பம்மல் தெற்கு பகுதி தலைமை தமிழக வெற்றிக் கழகம் சார்பில் பம்மல் தெற்கு பகுதி தலைமை டி.எஸ்.குமார் தலைமையில் பொன்னி நகர் பகுதியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு சிறப்பு அழைப்பாளராக செங்கல்பட்டு மேற்கு மாவட்ட தலைவர் மின்னல் குமார் கலந்து கொண்டு கேக்வெட்டி கிறிஸ்துமஸ் விழா உற்ச்சாகத்துடன் கொண்டாடினர். இதனை தொடர்ந்து ஏழை எளிய மக்களுக்கு நலதிட்ட உதவிகளும், பள்ளி மாணவர்களுக்கு செஸ் விளையாட்டு உபகரணங்கள் வழங்கினர்.முன்னதாக நடனம் பாடல் போன்ற கலை நிகழ்ச்சி நடைபெற்றது.
உடன் நிகழ்ச்சியை செங்கல்பட்டு மேற்கு மாவட்ட செயலாளர் அறிவானந்தம் மாவட்ட பொருளாளர் விஜய் தியாகு மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர்கள் பம்மல் தெற்கு பகுதி கழக நிர்வாகிகள் டி.எஸ்.குமார், கே.ஜெகதீசன், ஏகேஆர்.அருண், டி.தேவி, வி.ஜாவித் அகமத் இதில் 10வது வார்டு நிர்வாகிகள், மற்றும் மகளிர் அணியினர் உட்பட பம்மல் தெற்கு பகுதி தலைமை தமிழக வெற்றிக் கழக மாவட்ட, தொகுதி, பகுதி, வார்டு நிர்வாகிகள் ஏராளமனோர் கலந்து கொண்டனர்.
0 Comments