தமிழக சட்டசபை இன்று (டிச.,09) காலை 9.30 மணிக்கு கூடியது. மதுரை மாவட்டத்தில் ஹிந்துஸ்தான் ஜிங்க் லிமிடெட் நிறுவனத்திற்கு வழங்கப்பட்ட, டங்ஸ்டன் சுரங்க உரிமையை உடனடியாக ரத்து செய்யவும், சம்பந்தப்பட்ட மாநில அரசின் அனுமதியின்றி, சுரங்க உரிம ஏலங்களை மேற்கொள்ளக்கூடாது என்றும், மத்திய அரசை வலியுறுத்தி, முதல்வர் ஸ்டாலின் தனி தீர்மானம் கொண்டு வந்தார். நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் சட்டசபையில் தீர்மானத்தை முன்மொழிந்தார்.
அப்போது, துரைமுருகன் பேசியதாவது: மாநில அரசுகளின் அனுமதியின்றி எந்த சுரங்க அனுமதியையும் வழங்கக் கூடாது. சுரங்கத்திற்கு தேர்வான பகுதி ஏற்கனவே பல்லுயிர் பெருக்கத் தலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. சுரங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள தமிழக அரசும், மக்களும் ஏற்க மாட்டார்கள். அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற அச்ச உணர்வு ஏற்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.
சட்டசபையில் தீர்மானம் மீது விவாதம் நடத்தப்பட்டது. அப்போது, 'மாநில அரசின் ஒப்புதலின்றி சுரங்கம் தொடர்பான அனுமதியை மத்திய அரசு வழங்கக்கூடாது' என்று தீர்மானத்தை வரவேற்று, தமிழக வாழ்வுரிமைக் கட்சி தலைவர் வேல்முருகன் பேசினார். டங்ஸ்டன் சுரங்கம் அமைப்பதற்கு எதிராக தனித் தீர்மானத்திற்கு பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது.
0 Comments