ஈரோடு மாவட்டம் கோவை மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சத்தியமங்கலம் அடுத்த பண்ணாரி முதல் காரப்பளம் வரை உள்ள சாலையானது அடர்ந்த வனப்பகுதி மற்றும் 27 கொண்டை ஊசி வளைவுகள் கொண்ட மாலை பகுதி வழியாக கடந்து செல்கிறது.
இந்த மலைப்பாதையில் மாலை 6 மணி முதல் காலை 6 மணி வரை கனரக வாகனங்கள் செல்ல சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுப்படி போக்குவரத்து தடை அமலில் உள்ளது. இதன் காரணமாக பண்ணாரி மற்றும் காரப்பள்ளம் இரண்டு சோதனை சாவடிகளிலும் காலை 6:00 மணிக்கு ஒரு சேர வாகனங்கள் அனுமதிக்கப்படுவதால் திம்பம் மலைப்பாதையில் வாகனங்கள் ஒன்றோடு ஒன்று முந்தி செல்வதால் அவ்வப்போது போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு பல மணி நேரம் காத்துக் கொண்டிருக்க வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
வனத்துறை மற்றும் போக்குவரத்து துறை இந்த போக்குவரத்து நெரிசலை தடுப்பதற்கு இந்த வழியை பயன்படுத்தும் வாகன ஓட்டிகளுக்கு தக்க அறிவுரை வழங்கி அனுப்புமாறு இதன் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளார்கள்.
0 Comments