தென்காசியில் உடநலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவித்தொகை


தென்காசியில் உடநலக்குறைவால் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு உதவித்தொகையினை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் வழங்கினார்.

தென்காசி ஆயுதப்படையில் காவலராக பணியாற்றிய குலசேகரன்கோட்டையை சேர்ந்த காவலர் பசுபதிமாரி  என்பவர் உடல்நலக்குறைவால் உயிரிழந்தார். இந்நிலையில் அவருடன் பணியில் சேர்ந்து தமிழக காவல்துறையில் பணிபுரியும் 2017 பேட்ச் காவலர்கள் 2017- பேட்ச் காக்கும் உறவுகள் குழு என்ற வாட்ஸ்அப்  குழு மூலல் 38 மாவட்டங்களை சேர்ந்த  6802 காவல் நண்பர்களிடம் இருந்து உதவித்தொகை பெற்றது.

அவ்வாறு பெறப்பட்ட ரூ.24,25,900ஐ மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீனிவாசன் மற்றும் 2017 பேட்ச் காக்கும் உறவுகள் குழு நன்பர்கள் இணைந்து பசுபதி மாரியின் குடும்பத்தினரிடம் ஒப்படைத்தனர்.

Post a Comment

0 Comments