தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் அதிமுக சார்பில் முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 8-ம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி ஆண்டிபட்டி ஒன்றிய செயலாளர்கள் லோகிராசன் வரதராஜன் தலைமையில் ஆண்டிபட்டி வைகைஅணை சாலைப்பிரிவில் நடைபெற்றது.
முதலில் நிகழ்ச்சிக்கு வந்த அதிமுகவினர் எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்கள்.இதையடுத்து எம்ஜிஆர் சிலைக்கு கீழ்பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஜெயலலிதாவின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர்கள்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது.பின்பு அதிமுகவினர் மெளனஅஞ்சலி செலுத்தினர்.இந்நிகழ்ச்சியில் ஆண்டிபட்டி மற்றும் சுற்று வட்டாரப்பகுதி அதிமுகவினர் கலந்து கொண்டனர்.
0 Comments