கொஞ்சம் கூட கூச்சமே இல்லாமல் மீண்டும் மீண்டும் அதே பொய்களை சொல்கிறார் - அமைச்சர் ரகுபதி விளாசல்

 


அமைச்சர் ரகுபதி எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமிக்கு கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. அதில் கூறப்பட்டிருப்பதாவது, அறிக்கைகள், எக்ஸ் தளம், பேட்டிகள் மற்றும் சட்டசபைகளில் எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிச்சாமி கொந்தளித்த குற்றச்சாட்டுகள் அனைத்தும் புஸ்வானம் ஆன நிலையில் அடுத்ததாக youtube-ல் வந்து கொந்தளிக்க ஆரம்பித்துள்ளார்.

அதே பொய்களை அதே புலம்பலை கட்டவிழ்த்து விடுகிறார். பெஞ்சல் புயல், சாத்தனூர் அணை திறப்பு, கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சிபிஐ விசாரணை, பாலம் உடைப்பு என அவருடைய சமீபத்திய குற்றச்சாட்டுகள் அனைத்தையும் ஆதாரத்துடன் திமுக தவுடுபிடி ஆக்கிய நிலையிலும் கொஞ்சம் கூட கூச்சமே படாமல் மீண்டும் மீண்டும் அதே பொய்களை திரும்ப சொல்கிறார். 

வயித்தெரிச்சலில் கூறிய பொய்களை மீண்டும் கூறுகிறார். அரைத்த பொய்களை எத்தனை வாட்டி அரைத்தாலும் அது உண்மையாகி விடாது. திராவிட மாடல் நல்லாட்சி மீது கீரல் மற்றும் சீரல் கூட விழ வைக்க முடியாது என்று கூறினார்.

Post a Comment

0 Comments