தென்காசியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு விழா மற்றும் சமபந்தி விருந்து நடைபெற்றது


தென்காசியில் நகராட்சி தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு  மற்றும் சமபந்தி விருந்தும் நடைபெற்றது. இதனை நகராட்சி தலைவர் சாதிர் தொடங்கி வைத்தார்.

தென்காசி நகராட்சியில் பணியாற்றும் தூய்மை பணியாளர்களை பாராட்டு கௌரவிக்கும் விழா மற்றும் சமபந்தி விருந்து தென்காசியில் நடைபெற்றது. சமாதான சமூக சேவை அமைப்பின் சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு நகராட்சி தலைவர் சாதிர் தலைமை வகித்து, தூய்மை பணியாளர்களை பாராட்டி கௌரவித்தார். தொடர்ந்து நடைபெற்ற சமபந்தியை அவர் தொடங்கி வைத்தார்.

இந்நிகழ்ச்சியில், நகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், சமாதான சமூக சேவை அமைப்பின் அறங்காவலர் ராபின், பெஞ்சமின்  சுகாதார அலுவலர்முகமது இஸ்மாயில்,  நகர்மன்ற உறுப்பினர்கள் ராமகிருஷ்ணன், நாகூர் மீரான்,  சுகாதார ஆய்வாளர் மாரிமுத்து, கணேசன், ஈஸ்வரன், மற்றும் சமூக சேவை அமைப்பை சார்ந்த சரவணக்குமார்  ஜான்வெஸ்லி, குமார், நகர திமுக பொருளாளர் சேக்பரீத், மாவட்ட பொறியாளர் அணி தலைவர் தங்கபாண்டியன், இளைஞர் அணி முரளி ,  துப்புரவு பணி மேற்பார்வையாளர்கள் முத்துக்குமார், சுடலை, துரைசாமி,  முத்துமாரியப்பன், சுப்பிரமணியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Post a Comment

0 Comments