மழை நீர்களை உடனடியாக அகற்றிய பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசனுக்கு குவியும் பாராட்டுக்கள்


 திருவள்ளூர் ஒன்றியத்துக்கு உட்பட்ட பெருமாள் பட்டு ஊராட்சியில் உள்ள ரயில் நகர் மாருதி நகர் AKN நகர் ஆகிய பகுதிகளில் உள்ள நீரை உடனடியாக அகற்றி வருகிறார்கள் தொடர்ந்து அரசு ஆரம்ப சுகாதார நிலையம் சுற்றிலும் மழை நீர் சூழ்ந்துள்ளது உடனடியாக பெருமாள்பட்டு ஊராட்சி மன்ற தலைவர் சீனிவாசன் அவர்கள் ஜேசிபி இயந்திரத்தை கொண்டு உடனடியாக நீரை அகற்றி வருகிறார்.

 தொடர்ந்து பெருமாள் பட்டு ஊராட்சியில் உள்ள ரயில்நகர் ஸ்ரீராம் நகர்,மாருதி நகர், ஏகே என் நகர் , பகுதியில் உள்ள வார்டு உறுப்பினர் ஜன்சன் ஜெபக்குமார் அவருடைய பகுதியிலும் உள்ள அனைத்து இடங்களிலும ஜேசிபி வாகனத்தைக் கொண்டு முழுவதுமாக தண்ணீரை வெளியேற்றி வருகிறார்கள் தொடர்ந்து தாழ்வான பகுதியில் உள்ளவர்கள் நீர் வடிந்த உடன் வீட்டிற்கு செல்லுபடி அறிவுறுத்தப்பட்டுள்ளது.  

தொடர் மழை காரணமாக சாலைகள் முழுவதும் துப்புரவு பணியாளர்களை கொண்டு தூய்மைப்படுத்தப்பட்டு வருகிறது.நோய் கிருமிகள் பரவாத வண்ணம் பிளீச்சிங் பவுடர் மற்றும் டெங்கு பரவாத வண்ணம் இருக்க வீட்டு சுற்றிலும் தூய்மையாக வைத்திருக்கும் படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. மழை என்று பார்க்காமல் சாலையில் இறங்கி பணியை செய்து வரும் ஊராட்சி மன்ற தலைவருக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.

Post a Comment

0 Comments