‌அம்பேத்கர் குறித்து சர்ச்சை பேச்சு...... அமித்ஷாவை கண்டித்து அம்பேத்கர் புகைப்பட பதாகைகளை கையில் தாங்கியபடி நாகை அவுரி திடலில் திமுக சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்

‌ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா சட்டமேதை அம்பேத்கர் குறித்து சர்ச்சையாக பேசிய விவகாரம் நாடு முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் இந்தியா கூட்டணி கட்சியினர் அமித்ஷா பேச்சை திரும்ப பெற வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். அதன் ஒருபகுதியாக நாகை அவுரி திடலில் திராவிட முன்னேற்ற கழகத்தினர் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். 

தமிழ்நாடு மீன் வளர்ச்சிக் கழக தலைவர் என்.கெளதமன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், அம்பேத்கர் குறித்து தவறாக பேசிய ஒன்றிய அமைச்சர் அமித்ஷா விற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர். தொடர்ந்து அம்பேத்கர் உருவம் பொறித்த பதாகைகளை கையில் ஏந்தியவாரு ஒன்றிய அமைச்சர் மற்றும் ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பினர்.

மக்கள் நேரம் எடிட்டர் 

நாகை நிருபர் 

ஜீ.சக்கரவர்த்தி

Post a Comment

0 Comments