சின்னத்திரை நடிகை சித்ராவின் தந்தை தூக்கிட்டு தற்கொலை

 


சின்னத்திரை சினிமாவில் பிரபல நடிகையாக இருந்த சித்ரா ஹோட்டல் அறையில் சடலமாக மீட்கப்பட்டார். அவர் தற்கொலை செய்து கொண்டார் என்று கூறப்பட்ட நிலையில் அந்த வழக்கில் அவருடைய கணவர் ஹேம்நாத்  கைது செய்யப்பட்ட நிலையில் பின்னர் அவர் விடுதலையானார்.

கடந்த 2020 ஆம் ஆண்டு நடிகை சித்ரா தற்கொலை செய்து கொண்ட நிலையில் தற்போது அவருடைய தந்தை காமராஜ் தற்கொலை செய்து கொண்டு உயிரிழந்துள்ளார். சென்னை திருவான்மியூரில் உள்ள இல்லத்தில் தன் மகள் துப்பட்டாவால் தூக்கிட்டு காமராஜ் தற்கொலை செய்துள்ளார். அவருக்கு 64 வயது ஆகும் நிலையில் இந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மேலும் சித்ராவின் கணவர் ஹேம்நாத் விடுதலை செய்யப்பட்ட நிலையில் இதனால் மிகுந்த மன உளைச்சலில் இருந்த காமராஜ் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.

Post a Comment

0 Comments