தமிழ்நாடு மின்சார தொழிலாளர் சம்மேளன திட்ட செயற்குழு கூட்டம் திருவள்ளூரில் சனிக்கிழமை நடைபெற்றது.
அர்ஜுனா ஹோட்டலில் நடைபெற்ற கூட்டத்திற்கு திட்ட தலைவர் எஸ். நீலகண்டன் தலைமை வகித்தார். டி. திலகவதி வரவேற்றார்.திட்ட செயலாளர் ஏ. ஆர் .மதுசூதன் பாபு, திட்ட ஆலோசகர்கள் ஆர் .ஜெயராமுடு, கே. மெய்ஞானம், செயல் தலைவர் இ. மூர்த்தி, திட்ட பொருளாளர் எஸ். ஆனந்தன், கூடுதல் செயலாளர் கே. சதாசிவம், கோட்ட செயலாளர் எஸ். விஜயகுமார், ஏ. கோதண்டமூர்த்தி சிறப்புரையாற்றினர்.
புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்துவிட்டு பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும். காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். ஒப்பந்த தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்வது அவசியம்.
பிபி நம்பர் 2 முழுமையாக ரத்து செய்தல் முக்கியம். வாரிசு பணி விண்ணப்பங்களை விரைந்து பரிசீலித்து பணி வழங்க வேண்டும்.மருத்துவ ரீதியாக பணி ஓய்வு 53 வயதில் இருந்து 55 வயதாக மாற்றி எஸ். எஸ். சிறப்பித்த அரசாணையை வாரியத்தில் அமல்படுத்த வேண்டும்.
தொழில் பழகுநர் பயிற்சி முடித்தவர்களுக்கு பணி நியமனம் வழங்க வேண்டும்.டி சி ஆர் ஜி ரூ.20 லட்சத்திலிருந்து ரூ. 25 லட்சம் ஆக உயர்த்துவது அவசியம்.கணக்கீட்டு பிரிவில் உள்ள பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும்.துணை மின் நிலையங்களில் புதிய பதவிகள் நியமனம் செய்ய அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. திட்ட துணைத் தலைவர் எல். எஸ். தரணி நன்றி கூறினார்.
0 Comments