பொன்னேரி மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் தமிழகத் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த நாள் விழா .இருசக்கர வாகனப்பேரணியை மாவட்ட செயலாளர் டி ஜெ. கோவிந்தராஜன் எம் எல் ஏ தொடக்கி வைத்தார்.
திருவள்ளூர் கிழக்கு மாவட்டம் மீஞ்சூர் பேரூர் கழகம் சார்பில் தமிழக துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் பிறந்த தினத்தை முன்னிட்டு மீஞ்சூரில் இருசக்கர வாகன பேரணி நடைபெற்றது இந்நிகழ்ச்சிக்கு பேரூர் கழக செயலாளர் தமிழ்உதயன் ஏற்பாட்டில் நடைபெற்றது சிறப்பு அழைப்பாளராக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட செயலாளர் டி.ஜெ. கோவிந்தராஜன் எம்எல்ஏ இருசக்கர வாகனத்தை ஓட்டி பேரணியை தொடக்கி வைத்தார்.
இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் புதிய பேருந்து நிலையத்தில் உள்ள அம்பேத்கர் ,பெரியார் ,அண்ணா சிலைகளுக்கு மாலை அணிவித்தனர் .இதனைத் தொடர்ந்து மீஞ்சூர் பெட்ரோல் பங்க் மற்றும் புங்கமேடு அருகே கழக கொடியினை ஏற்றி வைத்தனர். வள்ளூவர் வாசுகி திருமண மண்டபத்தில் இலவச கண்,பல் சிகிச்சை முகாம் நடைபெற்றது. பின்னர் பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சியில் அவைத்தலைவர் பகலவன், பொதுக்கு உறுப்பினர் சுப்பிரமணி ,முன்னாள் ஒன்றிய செயலாளர் நரசிங்க மூர்த்தி, நிலவழகன், மின்வாரிய துறை சசிகுமார் , பேரூராட்சி துணைத்தலைவர் அலெக்சாண்டர், வக்கீல் சுரேஷ், ஒன்றிய குழு தலைவர் ரவி, கதிரவன்,நிர்வாகிகள் ஜோதி முருகன், கோபால், இளங்கோ, யோகி ,ஜெய்சங்கர், தினகரன், கருணாகரன், தமிழ் பிரியன், தன்ராஜ், ரஜினி ,ராஜேந்திரன், மணிமாறன் ,டில்லி, புருஷோத்தமன் ,அன்சர் பாஷா, சாமுவேல் ,மதன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
0 Comments