காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார். முன்னதாக அந்த தொகுதியில் அவருடைய மூத்த மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்ற நிலையில் அவர் உடல் நலக்குறைவினால் கடந்த வருடம் உயிரிழந்தார். அதே தொகுதியில் அவருடைய தந்தை ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட்டு வெற்றி பெற்றார். ஆனால் தற்போது இவர் இறந்துவிட்டார்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக இந்திய தேர்தல் ஆணையத்திற்கு தமிழ்நாடு சட்டப்பேரவை செயலகம் கடிதம் அனுப்பியுள்ளது. சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் உயிரிழந்ததால் அடுத்த ஆறு மாதத்திற்குள் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. அநேகமாக ஜனவரி அல்லது பிப்ரவரி மாதம் இடைதேர்தல் நடத்த வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது.
0 Comments