பொங்கல் சிறப்பு தொகுப்பு விற்பனையை தொடங்கி வைத்தார் அமைச்சர் பெரியகருப்பன்

 


தமிழக கூட்டுறவுத் துறை சார்பில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனையை அமைச்சர் பெரியகருப்பன் இன்று தொடங்கி வைத்தார். சென்னை தேனாம்பேட்டையில் உள்ள காமதேனு கூட்டுறவு அங்காடியில் வாடிக்கையாளர்களுக்கு பொங்கல் சிறப்புத் தொகுப்பு வழங்கி அவர் விற்பனையை தொடங்கி வைத்தார். இன்று முதல் கூட்டுறவு அங்காடிகளில் பொங்கல் சிறப்புத் தொகுப்பு விற்பனை செய்யப்படுகிறது.

பச்சரிசி, வெல்லம்., ஏலக்காய், முந்திரி, உலர்திராட்சை, நெய், பாசிப்பருப்பு என ஏழு பொருள்கள் அடங்கிய இனிப்பு பொங்கல் தொகுப்பு ரூ.199-க்கு விற்பனை செய்யப்படுகிறது. மஞ்சள் தூள், சர்க்கரை, துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பாசிப்பருப்பு, தனியா, புளி, பொட்டுக்கடலை, மிளகாய் தூள், கடலை எண்ணெய், உளுத்தம் பருப்பு உள்ளிட்ட 35 பொருட்கள் அடங்கிய சிறப்பு பொங்கல் தொகுப்பு ரூ.499-க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Post a Comment

0 Comments