திருவள்ளூர் மாவட்டம்பொன்னேரி தொகுதிக்குட்பட்ட ஜனப்பன் சத்திரம் கூட்டுச்சாலையில் பாஜகவின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட தலைவர் செந்தில்குமார் கருப்பு சட்டை அணிந்து சபதம் ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது தமிழகத்தில் தொடர் பாலியல் வன்முறைகள் சட்டம் ஒழுங்கு பிரச்சனை உள்ளிட்ட பல்வேறு மக்களுக்கு எதிரான வன்முறைகள் தலைவிரித்தாடுவதால் இதனை தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்.
இதனால் அவர் காலில் செருப்பு அணியாமல் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். இதற்கு துணை நிற்கும் விதமாக திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பாஜக தலைவர் செந்தில்குமார் திமுக தமிழகத்தில் ஆட்சியை விட்டு வெளியேறும் வரை கருப்பு சட்டை அணிந்து பாஜக தலைவர் அண்ணாமலைக்கு துணை நிற்கப் போவதாக சபதம் ஏற்றார். மாவட்ட அலுவலகத்தில் தனது கட்சியினருடன் சேம் ஆன் யு ஸ்டாலின் என்னும் பதாகைகள் ஏந்தி வெள்ளை சட்டையை கழட்டி கருப்பு சட்டையை அணிந்தார். பின்னர் அண்ணா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பாலியல் வன்கொடுமைக்கு எதிரான கோஷங்களை எழுப்பி கருப்பு வண்ணம் தரித்த சட்டையை அணிந்து கொண்டார்.
இந்த நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா கட்சியின் திருவள்ளூர் கிழக்கு மாவட்ட பொருளாளர் கே.ஜி.எம்.சுப்பிரமணி,மாவட்ட துணைத்தலைவர் சுந்தரம்,ஓ.பி.சி.மாவட்ட தலைவர் மாரிமுத்து,கும்மிடிப்பூண்டி நகர் தலைவர் நடராஜன்,ஆன்மிகப் பிரிவு மாவட்ட செயலாளர் டி.டி.ரவி,எஸ்,சி.அணி,மாவட்ட செயலாளர் பிரேம்குமார் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
0 Comments