2004 ஆம் ஆண்டு டிசம்பர் 26 அன்று ஏற்பட்ட ஆழிப்பேரலை எனப்படும் சுனாமியில் ஏராளமானோர் உயிர்த்தனர்.அதனை முன்னிட்டு ஆண்டுதோறும் சுனாமியில் இறந்தவர்களுக்கு நினைவு அஞ்சலி செலுத்தும் விதத்தில் பல்வேறு விதங்களில் இறந்தவர்களின் உறவினர்களும் மீனவ பொதுமக்களும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
பழவேற்காடு பகுதியில் இருபதாவது ஆண்டு சுனாமி தின நினைவு நிகழ்ச்சியில் வைரவன் குப்பம் கடற்கரைப் பகுதியில் இறந்தவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாகவும் இனி ஒரு பேரிடர் பொதுமக்களை தாக்காமல் கடல் அன்னை பாதுகாக்க வேண்டியும் மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தி கடல் அன்னையை வணங்கி மலர்களை தூவி கடலில் பாலை கலந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது.வைரவன் குப்பம் கிராம நிர்வாகிகள் ஏற்பாடு செய்த இந்த நிகழ்ச்சியில் கிராம பொதுமக்கள் கலந்து கொண்டனர்.
0 Comments