தென் கிழக்கு வங்கக்கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது என இந்திய வானிலை மையம் தெரிவித்துள்ளது.இது குறித்து, இந்திய வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி உருவானது. அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடையும்.
இது, மேற்கு, வடமேற்கு திசையில் நகர்ந்து, டிசம்பர் 12ம் தேதி வாக்கில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில், இலங்கை- தமிழகம் கடற்கரையை நோக்கி நகரக்கூடும்.
காற்றழுத்த தாழ்வு காரணமாக, வங்கக்கடலில் மணிக்கு 55 கி.மீ., வேகத்தில் சூறைக்காற்று வீசும். மீனவர்கள் கடலுக்கு மீன் பிடிக்க செல்ல வேண்டாம். தமிழகத்தில் இன்று முதல் டிசம்பர் 10ம் தேதி வரை மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது. தமிழகத்திற்கு டிசம்பர் 11, 12, 13ம் தேதிகளில் கனமழைக்கான மஞ்சள் அலெர்ட் விடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
0 Comments