தமிழக அரசு அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் கல்வி செலவை அரசாங்கமே ஏற்கும் என்று கூறி தற்போது அரசாணை வெளியிட்டுள்ளது. அதாவது தமிழகத்தில் 6 முதல் 12 ஆம் வகுப்பு வரையில் அரசு பள்ளிகளில் படித்து தலைசிறந்த உயர் கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கான கல்வி செலவை அரசாங்கம் முழுமையாக ஏற்கும்.
இதேபோன்று உயர் கல்விக்காக வெளிநாடு சென்று படிக்கும் மாணவர்களின் முதல் பயண செலவையும் தமிழக அரசு முழுமையாக ஏற்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இதனால் அரசு பள்ளிகளில் படித்து உயர் கல்வியில் படிக்க முடியாமல் சிரமப்படும் மாணவர்களுக்கு அரசாங்கத்தின் இந்த அறிவிப்பும் மிகுந்த பயனுள்ளதாக இருக்கும்.
0 Comments