நான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் - நயன்தாரா

 


தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருப்பவர் நயன்தாரா. இவருடைய திருமண வீடியோ சமீபத்தில் வெளிவந்தது. அதில் தன்னுடைய வாழ்க்கை வரலாறு மற்றும் காதல் திருமணம் குறித்து பல்வேறு விஷயங்கள் பற்றி நயன்தாரா பேசியிருப்பார். இந்த நிலையில் youtube சேனலுக்கு அளித்த ஒரு பேட்டியில் நயன்தாரா நான் விக்னேஷ் சிவனை திருமணம் செய்யாமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும் என்று கூறியுள்ளார். நானும் விக்னேஷ் சிவனும் ஒன்று சேராமல் இருந்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். உறவுக்குள் விக்னேஷ் சிவனை இழுத்தது நான்தான். எனக்கு இப்போது குற்ற உணர்ச்சியாக இருக்கிறது.

நான் மட்டும் அவரின் வாழ்க்கையில் இல்லை எனில் மக்கள் அவரை கொண்டாடி இருப்பார்கள். அவர் இயக்குனர் மற்றும் பாடலாசிரியர் என பல துறைகளில் தனக்கென தனி முத்திரையை பதித்திருப்பார். விக்னேஷ் சிவன் ரொம்ப நல்ல மனிதர். அவரைப் போன்ற ஒரு மனிதர் இருப்பாரா என்று கேட்டால் எனக்கு தெரியாது என்று தான் சொல்வேன். ஒருவர் மீது ஒருவர் எங்களுக்குள் இருக்கும் அன்பு சில நேரங்களில் எதிர்மறையான விமர்சனங்களால் மங்கி விடுகிறது. விக்னேஷ் சிவன் என்னுடைய ஆடம்பரத்தையோ அல்லது வெற்றியையோ பார்த்து என்னை திருமணம் செய்யவில்லை. நாங்கள் ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொண்டு தான் திருமணம் செய்துள்ளோம். மேலும் எங்களைப் பற்றி தேவையில்லாமல் பேசுவது சரியல்ல என்று கூறினார்.

Post a Comment

0 Comments