பிரபல நடிகரான விஜய் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை ஆரம்பித்தார். அந்த கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள விக்கிரவாண்டியில் விமர்சையாக நடைபெற்றது. மாநாட்டில் விஜய் தனது கட்சி கொள்கைகள், அரசியல் முன்னோடிகள், கொடி விளக்கம் என அனைத்தையும் விரிவாக பேசினார். அன்றிலிருந்து தமிழக அரசியல் களம் சூடு பிடித்துள்ளது. நேற்று முன்தினம் எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர் நூல் வெளியீட்டு விழாவில் விஜய் கலந்து கொண்டார். தமிழக வெற்றி கழக தலைவர் விஜய் அம்பேத்கர் மற்றும் அரசியல் கட்சிகள் பற்றி பேசியதை தொண்டர்கள் கொண்டாடி வருகின்றனர்.
நேரடியாக திமுக மற்றும் பாஜக கட்சிகளை விமர்சித்து விஜய் பேசி இருந்தார். வருகிற 2026 தேர்தலில் திமுக கூட்டணி கணக்குகளை மக்கள் மைனஸ் ஆக்கி விடுவார்கள் என விஜய் நேரடியாக அட்டாக் செய்தார். இந்த நிலையில் விஜயின் அரசியல் செயல்பாடுகளுக்கு நடிகை கஸ்தூரி ஆதரவு தெரிவித்துள்ளார். அவர் கூறியதாவது, திமுக கூட்டணி கணக்கு மைனஸ் ஆகும் என விஜய் பேசியது நடந்தால் அவர் வாய்க்கு சர்க்கரை போடுவேன் என கூறியுள்ளார்.
0 Comments