பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போட்டால் வழக்கு....

 


மத்திய பிரதேச மாநிலத்தில் உள்ள இந்தூர் இந்தியாவின் தூய்மையான நகரங்கள் பட்டியலில் முதலிடத்தில் இருக்கிறது. உலகம் முழுவதும் பிச்சைக்காரர்கள் இருக்கிறார்கள். அந்த வகையில் இந்தியாவிலும் பல்வேறு இடங்களில் பிச்சைக்காரர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்நிலையில் இந்தூர் பகுதியில் அதிக அளவில் பிச்சைக்காரர்கள் இருப்பதாக கூறப்படுகிறது. 

இவர்கள் நகரத்தின் தூய்மையை கெடுப்பதாக மாவட்ட நிர்வாகம் தற்போது குற்றம் சாட்டியுள்ளது. இதன் காரணமாக பிச்சைக்காரர்களை ஒழித்து கட்ட முடிவு செய்துள்ளனர். இதற்காக மாவட்ட நிர்வாகம் ஒரு அதிரடி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதாவது 2025 ஜனவரி 1ஆம் தேதி முதல் இனி யாரும் பிச்சைக்காரர்களுக்கு பிச்சை போடக்கூடாது. அப்படி பிச்சை போட்டால் பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும் என்று அறிவிப்பு வெளிவந்துள்ளது.

இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த கலெக்டர் ஆஷிஷ் சிங் கூறியதாவது, மாவட்ட நிர்வாகம் இந்தூரில் பிச்சை எடுக்கக் கூடாது என்று உத்தரவு பிறப்பித்துள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரம் இந்த மாதம் வரை செய்யப்படும். பிச்சை போடுவதன் மூலம் அவர்களின் பாவத்தில் பங்கு எடுக்காதீர்கள். ஜனவரி 1ஆம் தேதி முதல் யாராவது பிச்சை போடுவது தெரிந்தால் பிச்சை போடுபவர்கள் மீது வழக்கு பதிவு செய்யப்படும். 

இது தொடர்பான பிரச்சார திட்ட அலுவலர் தினேஷ் மிஸ்ரா கூறும்போது, பிச்சை எடுப்பவர்களிடம் வீடு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அதன்பிறகு சில பிச்சைக்காரர்களின் பிள்ளைகள் வங்கிகளில் பணி வருகிறார்கள். ஒரு பிச்சைக்காரரிடம் ஒருமுறை 29 ஆயிரம் ரூபாய் பணம் வைத்திருந்ததை அறிந்தோம். மேலும் ராஜஸ்தானை சேர்ந்த ஒரு கும்பல் இங்கு பிச்சை எடுப்பதற்காக குழந்தைகளுடன் வந்த நிலையில் அவர்களை பிடித்து அந்த குழந்தைகளை மீண்டும் என்று கூறினார்.

Post a Comment

0 Comments