தொடர் விடுமுறை..... கொடைக்கானலில் குவிந்த சுற்றுலா பயணிகள்

 


'மலைகளின் இளவரசி'யான கொடைக்கானலுக்கு தினமும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகை தருகின்றனர். தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு விடுமுறை விடப்பட்டுள்ளதால் கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்த வண்ணம் உள்ளது.

இந்த நிலையில் நேற்று வாரவிடுமுறை என்பதால் கொடைக்கானலில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அலைமோதியது. வனப்பகுதியில் உள்ள குணாகுகை, பில்லர்ராக், பைன்மரக்காடு, மோயர் பாயிண்ட், பசுமை பள்ளத்தாக்கு, பேரிஜம் ஏரி, மன்னவனூர் சூழல் சுற்றுலா மையம் உள்ளிட்ட பகுதிகளில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அப்போது அங்கு நிலவிய சீதோஷ்ண சூழலை அனுபவித்து மகிழ்ந்தனர்.

இதேபோல் நட்சத்திர ஏரியில் படகு சவாரி செய்தும், ஏரிச்சாலையில் குதிரை மற்றும் சைக்கிள் சவாரி செய்தும் உற்சாகம் அடைந்தனர். மேலும் பிரையண்ட் பூங்காவில் உள்ள புல்தரையில் குடும்பத்துடன் அமர்ந்து பொழுதுபோக்கினர். இதற்கிடையே நாளை மறுநாள் ஆங்கில புத்தாண்டு பிறக்கவுள்ளது. இதனை முன்னிட்டு கொடைக்கானலில் தற்போதே ஏராளமான சுற்றுலா பயணிகள் குவிய தொடங்கியுள்ளனர். இதனால் தங்கும் விடுதிகளில் அறைகள் வேகமாக நிரம்பி வருகின்றன.

Post a Comment

0 Comments