சென்னையில் நேற்று நடைபெற்ற 'எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்' நூல் வெளியீட்டு விழாவில் வி.சி.க. பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜுனா பேசியபோது, தமிழ்நாட்டில் மன்னராட்சி ஒழிக்கப்பட வேண்டும் என்றார். பிறப்பால் ஒரு முதல்-அமைச்சர் இங்கு உருவாகக் கூடாது. தமிழ்நாட்டை ஒரு கருத்தியல் தலைவர்தான் ஆள வேண்டும்" என்று தெரிவித்தார்.
இந்த நிலையில், ஆதவ் அர்ஜுனா பேசிய கருத்து தொடர்பாக அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் இன்று செய்தியாளர்களிடம் பேசுகையில், "மக்கள் மனதில் உள்ளதைத்தான் ஆதவ் அர்ஜுனா வெளிப்படுத்தி இருக்கிறார். அவர் மட்டுமல்ல, நாங்களும் அதே கருத்தைத்தான் சொல்கிறோம். தி.மு.க.வை பாராட்டுவதற்கும் ஒன்றும் இல்லை, அவர்களின் திட்டங்களால் நாட்டு மக்களுக்கும் எந்த பயனும் இல்லை" என்று தெரிவித்தார்.
0 Comments